சென்னை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே பதவி விலக வலியுறுத்தி அக்டோபர் 2-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 2-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று, தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்ட, தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்புக் கடிதம் தொடர்பான செய்தி, தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து, வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுத்து வரும் தலைமை தேர்தல் ஆணையர், அப்பதவியில் நீடிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார். ஞானேஷ்குமார் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் ஆகவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் சக ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலோ அல்லது ஆலோசனையோ இன்றி, தலைமைத் தேர்தல் ஆணையரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), புதிய வாக்காளர் சேர்ப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட விதிகள் மாற்றம் உள்ளிட்ட அனைத்து உத்தரவுகளையும், விதி மாற்றங்களையும் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன், ஜனநாயகத்தின் நம்பிக்கையைச் சிதைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு வழங்கி உள்ள ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/sdpi-protest-on-october-2-demanding-the-resignation-of-chief-election-commissioner-gyanesh-kumar




