புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி கூடியது. அவை கூடியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் 4-வது நாளாக இன்று காலை மாநிலங்களவை கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பா.ஜ.க. எம்.பி. கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் பேசுகையில், “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். இந்த விவாதம் 2 நாட்கள் வரை கூட நடைபெறலாம். அதே சமயம், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசாங்கமும் தனது கண்ணோட்டத்தை பதிவு செய்ய விரும்புகிறது. இது குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எப்போது விவாதிக்கலாம்? எத்தனை மணி நேரங்கள் விவாதிக்கலாம்? என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கலாம். இது குறித்து விவாதம் செய்வதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் பேச முயன்றது. ஆனால் எதிர்கட்சிகள் பல முன் நிபந்தனைகளை விதித்து விவாதத்தில் இருந்து தப்பியோட முயல்கின்றனர்” என்றார். இந்நிலையில், கிரண் ரிஜிஜுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கடும் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/neet-question-paper-leak-issue-opposition-parties-trying-to-run-away-without-debating-it-kiren-rijiju




