புதுடெல்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. இதனால், பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனினும், 20 மசோதாக்கள் வரை நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு முழுமையாக தயாராக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகி செல்வது அதிக விரக்தியும், ஏமாற்றமும் அளிக்கிறது என்று வேதனை தெரிவித்து உள்ளார். தொடர்ந்து அவர், பதாகைகளை ஏந்துவதும், முழக்கமிடுவதும் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வேலையாக மாறிவிட்டது. நாளைய தினம் கூட்டத்தொடரின் கடைசி நாளாக உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் அமளியை தவிர்த்து ஆக்கப்பூர்வ விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/opposition-parties-must-join-constructive-debate-says-union-minister-kiren-rijiju




