சென்னை, அழைப்பாணை இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்து கண், கைரேகை பதிவு செய்த போலீசாருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மனித உரிமை மீறல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில், எந்தவொரு சட்டப்பூர்வ அழைப்பாணை அல்லது முறையான காரணமும் இல்லாமல் சிறுபான்மை மக்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, அவர்களிடம் கண் ரேகை மற்றும் கைரேகைகளை பதிவு செய்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் மனித உரிமை மீறலாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். சட்டத்தின் பெயரில் எந்தவொரு சமூகத்தினரையும் அச்சுறுத்தும் அல்லது குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விசாரணை இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள். எந்தவொரு சமூகத்தினருக்கும் அச்சம் ஏற்படும் சூழல் உருவாகாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-community-should-not-be-targeted-in-the-name-of-the-law-indian-thowheed-jamath-condemns




