போரூர்: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் போக்குவரத்துத்துறையும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று போரூர் பகுதியில் மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய சில அரசுப்பள்ளி மாணவர்கள், பேருந்துக்குள் இடம் இருந்தபோதிலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த நடத்துநர், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பேருந்துக்குள் சென்று பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் பேருந்தை இயக்க முடியாது என்றும் எச்சரித்ததாக தெரிகிறது. நடத்துநர் மீது தாக்குதல் இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், நடத்துநருடன் பேருந்துக்குள்ளேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவர்கள் நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி, திடீரென தாக்கியதாக தெரிகிறது. இதனை பார்த்த சக பயணிகள் மற்றும் பேருந்தில் இருந்த பெரியவர்கள் மாணவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், அவர்களின் பேச்சை கேட்காமல் மாணவர்கள் நடத்துநரை தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்துக்குள் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. பள்ளிக்கல்வித்துறை விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கவும் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/conductor-student-clash-on-city-bus-school-education-department-orders-full-investigation




