ஈரோடு, பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீண்டும் முதலை நட மாட்டம் உள்ளதால், பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலைகள் நடமாட்டம் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமர ஹாடா வழியாக வரும் மாயாரும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆறுகள் வந்து கலக் கும் இடத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது தண்ணீரில் இருந்து வெளியே வரும் முதலைகள் மணல் திட்டுகளில் படுத்திருக்கின்றன. வெயிலில் காய்வதற்காக. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பவானிசாகர் அணையில் பவானி ஆறும், மாயாறும் கலக்கும் பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மணல் திட்டில் முதலை இருப்பதை மீன் பிடிக்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். தற்போது மீண்டும் முதலை நடமாட்டம் காணப்படுகிறது. தண்ணீருக்குள் இருக்கும் முதலைகள் வெயிலில் காய்வதற்காக அவ்வப்போது வெளியே வந்து மணல் திட்டுகளில் படுத்து கிடக்கின்றன. அதனால் அந்த பகுதி யில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லவேண்டாம். சுற்றுலா பயணிகள் நீர்த்தேக்க பகுதிகளுக்கு வீடியோ எடுக்கவோ. செல்பி எடுக்கவோ செல்லவேண்டாம். கவனமாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/crocodile-presence-in-bhavanisagar-dam-reservoir-area-again




