டோக்கியோ, ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:- வில்வித்தை: காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் காலிறுதியில் சிகிதா தனிபார்த்தி (இந்தியா)-நூரிசா டியான் அஷ்ரிபா (இந்தோனேசியா), அதிகாலை 5.30 மணி, காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் காலிறுதியில் கணேஷ் மணிரத்னம் திருமுரு (இந்தியா)-சிலுன் சென் (சீன தைபே) காலை 9.47 மணி. கிரிக்கெட்: ஆண்கள் அரையிறுதியில் இந்தியா-இலங்கை, காலை 10.30 மணி. ஆக்கி: ஆண்கள் அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான், பகல் 1 மணி. கைப்பந்து: ஆண்கள் காலிறுதியில் இந்தியா-பாகிஸ்தான், காலை 6.30 மணி. ஜூடோ: பெண்கள் 57 கிலோ தொடக்க சுற்று, யாமினி மவுரியா, காலை 7.30 மணி, பெண்கள் 70 கிலோ தொடக்க சுற்று, இனுகன்பி தேகலம்பம், காலை 7.30 மணி. துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று, அனிஷ் பன்வாலா, காலை 6.10 மணி. ஸ்குவாஷ்: பெண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா- ஹாங்காங், காலை 7 மணி, ஆண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா-மலேசியா, பகல் 1 மணி. டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் சுமித் நாகல் (இந்தியா)-வு யிபிங் (சீனா). காலை 8.30 மணி. மல்யுத்தம்: ஆண்கள் 77 கிலோ தொடக்க சுற்று, அமன், காலை 7.22 மணி, பெண்கள் 62 கிலோவில் மான்சி, காலை 7.30 மணி, ஆண்கள் 60 கிலோவில் சுமித், காலை 7.55 மணி, ஆண்கள் 97 கிலோவில் நிதேஷ், காலை 8.19 மணி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-key-india-events-today-3




