சென்னை, 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 8-வது முறையாகும். இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனதி எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மனமார்ந்த வாழ்த்துகள் இலங்கையை வீழ்த்தி, 8-வது முறையாக மகளிர் டி20 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களின் கடின உழைப்பு, தளராத உறுதி மற்றும் தேசத்திற்கான எழுச்சியூட்டும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மகத்தான வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளன. உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-womens-team-wins-asia-cup-for-the-8th-time-vanathi-srinivasan-congratulations




