நானியின் ‘தி பாரடைஸ்’ படம் 4 நாட்களில் ரூ.155 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அனிருத் இசையமைப்பில் உருவான பாடல்கள் கவனம் ஈர்த்திருந்தன. இதில் நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரோல்களுக்கு நன்றி தெரிவித்த நானி நடிகர் நானி பாராட்டுக்கும் டிரோல்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். இப்படம் நானியின் 33-வது படமாகும். இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புப் பாடலில் கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலானது. படத்தின் 4 நாள் வசூல் தாய் - மகன் பாசத்தை அடிப்படையாக கொண்ட ஆக்ஷன் கதையான இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த படம் 4 நாட்களில் ரூ.155 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுவே, நடிகர் நானியின் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். மேலும், இந்த வார இறுதியில் ரூ.200 கோடியை நெருங்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்படம் 2 மில்லியன் வசூலித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nanis-the-paradise-film-collects-rs-155-crore-in-4-days



