தூத்துக்குடி, தூத்துக்குடியில் நண்பர்களிடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவரை வாயில் கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். மது அருந்திய நண்பர்கள் தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 40), கார் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். சக்தி நகரைச் சேர்ந்த சரவணன்(40), பிரையண்ட் நகரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(33) ஆகிய இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரையண்ட்நகர் 7-வது தெருவில் உள்ள வெட்டவெளியில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், முத்துக்குமார் தனது நண்பர்களான சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. டிரைவருக்கு கத்திக்குத்து இதனால் ஆத்திரமடைந்த சரவணனும், ஜெயப்பிரகாஷும் சேர்ந்து முத்துக்குமாரை சரமாரியாக தாக்கி, கத்தியால் அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் வாயில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் மயங்கிச் சரிந்ததும், அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் கைது இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த முத்துக்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-stabbed-in-the-mouth-in-thoothukudi-two-friends-arrested




