ஆம்ஸ்டெல்வின், 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதில் 'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் போகப்போக இங்கிலாந்து தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்து இந்திய அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தது. இருப்பினும் இந்திய அணி தற்காப்பு யுக்தியில் அருமையாக செயல்பட்டு, இங்கிலாந்து அணி கோலடிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்தது. குறிப்பாக கோல்கீப்பர் கரிபாம் பிச்சு தேவி எதிரணியின் பல ஷாட்களை தடுத்து அணியை தற்காத்தார். இங்கிலாந்து அணி 11 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதில் ஒன்றை கூட கோலாக்க முடிய வில்லை. இந்திய அணியினர் தங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறினர். முடிவில் இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. 'டி' பிரிவில் லீக் சுற்று முடிவில் சீனா (2 வெற்றி, ஒரு டிரா) 7 புள்ளிகளுடன் முதலிடமும், இந்தியா (ஒரு வெற்றி, 2 டிரா) 5 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து அடுத்த சுற்றுக்கு (2-வது சுற்றுக்கு) முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-indian-team-advances-to-the-second-round




