சென்னையின் மையத்தில் உள்ள மிக முக்கியமான கிண்டி ரயில் நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை உள்ளது. அதில் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆகாய நடைமேடையின் ஏறும், இறங்கும் படிக்கட்டின் அடிப்பகுதியில் நீண்ட நாள்களாக குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. அருகில் அமைந்துள்ள உணவகம் மற்றும் குளிர்பான கடையில் இருந்து மக்கள் அன்றாடம் உணவுப் பொருள்களின் கழிவுகளை இங்கு வீசுவதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக கிண்டி ரயில் நிலையம் திகழ்வதால், அப்பகுதி வழியாக தினசரி அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். பொதுவெளியில் நிலவும் இந்தப் பெரும் சுகாதார சீர்கேட்டால் தினமும் இப்பாதையில் பயணிக்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இனியும் குப்பைகள் வந்து குவியாத வகையில், இரும்புப் பலகை வைத்து முறையாக தடுப்பு ஏற்படுத்தி தடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/guindy-railway-station-bridge-garbage-foul-smell-trouble-commuters-demand-urgent-action




