துபாய், இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஜோவிதா டிசோசா(வயது 29). இளங்கலை மருந்தியல் மற்றும் மார்க் கெட்டிங் துறையில் முதுகலை படிப்பு முடித்த இவர் துபாய்க்கு குடிபெயர்ந்தார். இங்கு அல் ஜலீலா அறக்கட்டளையில் சேர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் ஜோவிதாவுக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நினைவிழந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜோவிதா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஜோவிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதன்படி, அமீரக தேசிய உறுப்பு தான திட்டம் ஹயாத் மூலமாக ஜோவிதாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இது குறித்து ஜோவிதாவின் பெற்றோர் கூறுகையில், “ஜோவிதா வாழும் வரை பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் சேவை செய்து வந்தார். அவரது எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக, 3 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் அவரது உறுப்புகள் தானமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டன” என்று தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/organs-of-indian-woman-declared-brain-dead-in-dubai-donated-3-people-get-a-new-lease-of-life



