அங்காரா, துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் உலகப் புகழ்பெற்ற நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடந்து முடிந்தது. உலகையே உற்று நோக்க வைத்த இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர், கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வல்லரசு நாடுகளின் அதிபர்களும், பிரதமர்களும் நேரில் கலந்துகொண்டனர். உக்ரைன் போர் விவகாரம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து இந்த மாநாட்டில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. துப்பாக்கிப் பரிசு மாநாட்டின் இறுதி நாளில், அந்த நாட்டை நினைவுபடுத்தும் நினைவு பரிசுகள் வழங்குவதுதான் உலக நாடுகளின் மரபாகும். ஆனால், உலக தலைவர்கள் அனைவருக்கும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்தார். மாநாட்டில் பங்கேற்ற அத்தனை நாட்டு தலைவர்களுக்கும், அவர்களது பெயர்கள் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அதிநவீன கைத்துப்பாக்கிகளை பரிசாக வழங்கினார். பெல்ஜியம் பிரதமர் தனது நாட்டில் இறங்கியபோது, அவரது உடைமை களில் அசல் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்து, உட னடியாக அதை விமான நிலைய லாக்கரில் பூட்டினர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு துப்பாக்கியுடன் 500 தோட்டாக்களும் வழங்கப் பட்டிருந்தன. நெதர்லாந்து போன்ற நாடுகளில் கடுமையான ஆயுதச் சட்டங்கள் உள்ள தால், தங்களின் துப்பாக்கிகளைத் துருக்கியில் உள்ள தூதரகங்களி லேயே அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கள் இந்த துப்பாக்கிகளைச் செயலிழக்கச் செய்து, தங்களின் தேசிய ராணுவ அருங்காட்சியகங்களுக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த துப்பாக்கி பரிசு, உலக அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/nato-summit-concludes-turkish-presidents-bizarre-gift-stuns-world-leaders




