புதுடெல்லி, 'நீட்' தேர்வை தொடர்ந்து, கடந்த வாரம் நடந்த நெட் தேர்விலும் முறை கேடு நடந்து உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியி ருப்பதாவது:-, “நீட் மற்றும் நெட் தேர்வுகளில் முறைகேடுகள் என அடுத்த டுத்து புகார்கள் எழுந்தாலும், லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பை மதிக்காமல் மத்திய அரசு கண்மூடி தூங்குகிறது. சமூக வலைத்தளங்களில் உலா வந்த 100 பக்க 'பிடிஎப்' கோப்பில் இருந்த 90 கேள்விகள், உண்மையான 'நெட்' சமூகவியல் தேர்வுதாளுடன் அப்படியே பொருந்தியுள்ளன. இந்த வினாத்தாள் பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ரூ.2.25 லட்சத் திற்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இரவு பகலாக படித்த மாணவர்களின் உழைப்பு இந்த அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. பிரதமர் மற்றும் கல்வி மந்திரியிடம் இருந்து பொறுப்புணர்வையோ, நீதியையோ எதிர்பார்ப்பது வீண். இனி மாணவர்க ளின் கூட்டுக்குரல் மட்டுமே கல்விப் புரட்சியைக் கொண்டு வரும்."இவ்வாறு அவர் கூறியுள்ளார். இருப்பினும், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய தேர்வு முகமை தரப்பில் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/irregularities-in-net-exam-following-neet-rahul-gandhi-alleges




