‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் புதிய தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. புதிய டிரெய்லரில் வித்யுத் ஜம்வாலின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் வித்யுத் ஜம்வால் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், இவர் தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது. களரி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகர் வித்யுத் ஜம்வாலின், ஆக்சன் காட்சிகளுக்காகவே அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தப் படத்தில், தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார், இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது. பிரபலங்கள் பட்டாளம் இப்படத்தில் ஆண்ட்ரூ கோஜி ‘ரியூ’வாகவும், நோவா சென்டினியோ ‘கென் மாஸ்டர்ஸ்’ ஆகவும், காலினா லியாங் ‘சுன்-லி’யாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜேசன் மோமோவா, ஜோ “ரோமன் ரெய்ன்ஸ்” அனோவாயி, கோடி ரோட்ஸ், 50 சென்ட் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். அக்டோபரில் திரைக்கு வருகிறது கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ திரைப்படம் 1993-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ‘வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்’ போட்டியை மையமாக வைத்து கதை நகர்கிறது. இப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் டிரெய்லர் இந்த நிலையயில், ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் புதிய தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. புதிய டிரெய்லரில் வித்யுத் ஜம்வாலின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. குறிப்பாக தல்சிம் கதாபாத்திரத்தின் யோகா மற்றும் உடலை நெகிழ்வாக பயன்படுத்தும் தனித்துவமான சண்டை பாணியை வித்யுத் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-trailer-for-the-movie-street-fighter-featuring-vidyut-jammwal-as-the-villain-has-been-released




