ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனும், 7 கிராண்ட்ஸ் லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் நேற்று விலகினார். முழங்கை காயம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடாத அல்காரஸ் சின்சினாட்டி ஓபன் மூலம் களம் திரும்ப திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் காயத்தில் இருக்கும் இன்னும் முழுமையாக மீளாததால் ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளார். ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட் டியில் நடப்பு சாம்பியனான அல்காரஸ் ஆடுவார் என்று தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/tennis/cincinnati-open-tennis-carlos-alcaraz-withdraws




