சென்னை, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தபால் ஓட்டு வசதி நடைமுறையில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தி வாக்களிக்கலாம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்டோருக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படுகிறது. தபால் ஓட்டு மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டது. இடைத்தேர்தலிலும் தொடரும் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இந்த வகைகளைச் சேர்ந்தவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களித்தனர். இதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பே, தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் தபால் ஓட்டு வசதி தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-and-puducherry-by-elections-election-commission-allows-postal-voting




