இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மாவிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ரோஹித் சர்மா அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, "வெளியே பேசப்படும் பேச்சுகள் ஒருபோதும் எனது விளையாட்டைத் தீர்மானித்ததில்லை. என் வேலை பேட்டிங் செய்வதுதான். நாட்டிற்காக விளையாடுவது மட்டுமே எனக்கு செய்ய சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாளிலிருந்தே இதுபோன்ற சலசலப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் கிரிக்கெட் விளையாடும் வரை இந்த வதந்திகள் தொடரும். களத்தில் நான் என்ன செய்கிறேன், அணியின் வெற்றிக்கு எப்படி பங்களிக்கிறேன் என்பதுதான் முக்கியம். வெளியே சலசலப்புகள் இருக்கட்டும், அது இல்லையென்றால் சுவாரசியமே இருக்காது” என்று ரோஹித் கூறியிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://sports.vikatan.com/cricket/cricket-player-rohit-sharma-about-his-retirement




