சென்னை, சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைத்தார். சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்தநிலையில், இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.போக்குவரத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மின்சார ஏசி பேருந்தில் பயணித்த முதல்-அமைச்சர் விஜய் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரிடம் கலந்துரையாடினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-bus-service-chief-minister-vijay-launched




