கரூர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார். வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1.000 லஞ்சம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது 36), ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) உள்ளார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் விபிலன்(28) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த வி.ஏ.ஓ., விபிலனிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். வி.ஏ.ஓ. கைது லஞ்சம் கொடுக்க விரும்பாத விபிலன் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சென்று வி.ஏ.ஓ. அன்புராஜை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-vao-arrested-for-accepting-a-bribe-of-rs1000-to-issue-a-succession-certificate




