கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை அருகே மனைவியை குத்திக் கொன்ற விவசாயி, காரில் இருந்து உடலை கீழே தள்ளி விட்டு ரத்தக்காயங்களுடன் போலீசில் சரண் அடைந்தார். பிறந்தநாள் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி மளகன் எல்லப்பா (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி பிரேமா (28). இவர்களுக்கு தனுஷ் (11), வெற்றி (8) ஆகிய 2 மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தனர். மூத்த மகன் தனுசுக்கு வருகிற 30-ந்தேதி பிறந்த நாள் என்பதால், நேற்று முன்தினம் அவனுக்கு புத்தாடை வாங்கி கொடுத்துவிட்டு மகன்களை பார்த்து விட்டு கணவன், மனைவி இருவரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். ஓடும் காரில் தகராறு இரவு 8 மணி அளவில் கெலமங்கலம் கூலிசந்திரம் நான்கு வழிச்சாலையில் வந்த போது கணவன்- மனைவி இடையே ஓடும் காரில் தகராறு ஏற்பட்டுள் ளது. உடனே எல்லப்பா காரை நிறுத்தி இருக்கிறார். தகராறு முற்றவே ஆத் திரம் அடைந்த பிரேமா, காரில் இருந்த கத்தியை எடுத்து கணவரை சரமாரி யாக குத்தியதாக தெரிகிறது. இதில் சுதாகரித்துக் கொண்ட எல்லப்பா, மனைவியை தாக்கியதுடன் அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சர மாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேமா காரி லேயே பிணமானார். உடனே அவரை காரில் இருந்து அங்கேயே கீழே தள்ளி விட்டுவிட்டு எல் லப்பா மத்திகிரி போலீஸ் நிலையம் வந்தார். அவர், கையில் ரத்த காயங் கள் இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரிடம் போலீசார் விசாரித்த போது, மனைவியை கொலை செய்து விட்டதாகவும். சரண் அடைவதாகவும் கூறியுள்ளார். உடனே போலீசார் அவரை ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸ் விசாரணை இந்த கொலை நடந்த இடம் கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லை பகுதி என்பதால், சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கெலமங்கலம் போலீசார் சம் பவ இடத்துக்கு சென்று பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன. போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:- கருத்து வேறுபாடு எல்லப்பாவுக்கும். பிரேமாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 3 குழந்தைகள் பிறந்த நிலை யில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரேமா கெலமங்க லம் அருகே ஜோதிபுரத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 2 மகன்களை விடுதியில் தங்கி படிக்க வைத்த எல்லப்பா, மகளை மட்டும் தானே வளர்த்து வந்தார். இதற்கிடையே எல்லப்பாவுக்கும், திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரே மாவுக்கு தெரிந்தவுடன், கணவரை விட்டு பிரிந்து இருப்பதால்தான், அவர் வேறு பெண்ணுடன் பழகுகிறார் என நினைத்துள்ளார். எனவே கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கடந்த 14-ந் தேதி ஒசூர் அனைத்து மகளிர் போலீசில் பிரேமா புகார் அளித்தார். செருப்பால் அடித்த மனைவி போலீசார் எல்லப்பா, பிரேமா இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறு பெண்ணுடன் எப் படி பழகலாம் என்று கூறி பிரேமா போலீஸ் நிலையத்தில் வைத்தே கணவரை செருப்பால் அடித்ததாக தெரிகிறது. அத்தனை பேர் மத்தியில் செருப்பால் அடித்து விட்டாளே என்று எல்லப்பா வேதனை அடைந்தார். அப்படி இருந்தும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக எல்லப்பா தன்னுடைய மாமனார் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம்தான் விடுதியில் தங்கி படிக்கும் மகன்களை பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் காரில் சென்றுள்ளனர். யார்? யாரை கொலை செய்வது என்பதில் போட்டி அப்போது போலீஸ் நிலையத்தில் செருப்பால் அடித்து அவமானப்படுத்திய மனைவியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எல்லப்பா நினைத்துள்ளார். அதற்காகவே கத்தியை எடுத்து காரில் வைத்து இருக்கிறார். ஆனால் கணவன்-மனைவி தகராறு ஏற்பட்ட போது, பிரேமா முந்திக்கொண்டு கத்தியால் கணவரை தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார். ஆனால் யார்? யாரை கொலை செய்வது என்ற போட்டியில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டதில் எல்லப் பாவே இறுதியில் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியை கணவரே கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-husband-stab-his-wife-to-death-in-the-car-shocking-news




