சென்னை, சென்னையில் ஆகஸ்ட் - 4,5,6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோக திட்டப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நியாயவிலை கடைகள் இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/in-chennai-door-to-door-distribution-of-ration-items-will-be-held-on-august-4-5-and-6




