சென்னை, நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு, சிறுமிகள் பாலியல் வழக்கில் சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். வீரமணி 'போக்சோ' வழக்கில் கைது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, 84 வயதில் 'போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய வழக்கு மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மண்ணில் தோண்டத் தோண்ட வரும் நீரூற்று போல, இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. குஷ்பு பரபரப்பு பதிவு இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு சிறுமிகள் பாலியல் வழக்கில் சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும். என தனது எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஒரு குழந்தையின் வலியைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியாது; அவளது குரலை அடக்கிவிடவும் முடியாது; நீதியை ஒருபோதும் பேரம் பேசித் தீர்மானிக்க முடியாது. அதேவேளையில், அதிகாரமிக்கவர்கள் தங்களைத் தண்டிக்கவே முடியாது என்று நினைக்கும் நிலையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மன்னிக்க முடியாத செயல் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமையை விடக் கொடூரமான, கோழைத்தனமான மற்றும் மன்னிக்க முடியாத செயல் வேறெதுவும் இல்லை. குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படவோ, மவுனமாக்கப்படவோ அல்லது வேறொருவரின் வக்கிரமான செயல்களின் வடுக்களைச் சுமக்கவோ கட்டாயப்படுத்தப்படக் கூடாது. எப்படித் தண்டனையின்றி தப்பித்து வந்தார்? இது குறித்த எனது கோபம் முழுமையானது, உறுதியானது மற்றும் சமரசமற்றது. பாதிக்கப்பட்டவரை மவுனமாக்கவோ அல்லது நீதியைத் தடுக்கவோ செல்வாக்கு, அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் அல்லது பணம் (இவ்வழக்கில் 70 கோடி ரூபாய்) ஆகியவை பயன்படுத்தப்பட்டால், அது என் கோபத்தை மேலும் அதிகரிக்கிறது; அத்தகைய செயல் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஆர் வீரமணி வழக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படித் தண்டனையின்றி தப்பித்து வந்தார்? இது எவ்வளவு அவமானகரமானது! குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க வழியே இருக்கக்கூடாது. சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-he-manage-to-evade-this-for-so-many-years-khushbu-questions-regarding-the-veeramani-case




