சென்னை, சுதந்திர போராட்ட வீரரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- மலர் தூவி மரியாதை விடுதலைப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவரும், எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக அரசியல் களத்தில் தொடர்ந்து போராடியவருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழாவையொட்டி, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ramasamy-padayachiars-birthday-amamukha-showered-floral-tributes




