வடமதுரை, போலி டாக்டர் அந்தோணிதாசை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில வைத்தியம் திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வடமதுரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொம்பேறிபட்டியில் செயல்பட்டு வந்த ஆஸ்பத்திரியில், அந்தோணிதாஸ் (வயது 68) என்பவர் முறையான கல்வித் தகுதி (எம்.பி.பி.எஸ்.) இன்றி நோயாளிகளுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது. கைது மேலும், அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் ஆங்கில மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைதொடர்ந்து, போலி டாக்டராக செயல்பட்ட அந்தோணிதாசை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவமனை அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/treating-patients-without-an-mbbs-degree-police-arrest-quack




