பீஜிங், மேற்காசிய மோதல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தராக இருந்து பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும், சர்வதேச தலைமைத்துவத்தில் இந்தியாவின் பங்கு என்ன? என்பது குறித்து பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி விளக்கமாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிடுவது நியாமானது இல்லை என்று கருதுகிறேன். இரண்டு நாடுகளின் பொருளாதார நிலையை பார்த்தாலே உங்களுக்கு பல விஷயங்கள் புரிந்துவிடும். ஒவ்வொரு நாடும் எத்தகைய இயல்புடையது? என்றும், சர்வதேச அமைப்பில் ஒவ்வொரு நாடும் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உலகத்துடன் இந்தியா கொண்டுள்ள ஒருங்கிணைப்பை பெரும்பாலான நாடுகளால் இன்னும் எட்ட முடியாத சூழல் உள்ளது. இதில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் அமைதி, பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்களில் பங்களிக்க நாம் கொண்டுள்ள விருப்பம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் மத்தியஸ்தம் அல்லது சமரச முயற்சி குறித்த விஷயத்தைப் பொறுத்தவரை, அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த தேசிய நிலைப்பாட்டிற்கு எந்தளவுக்குப் பயனளிக்கும் என்பதை அந்தந்த நாடுகளே தீர்மானிக்க வேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் அத்தகைய முயற்சிகளில் எங்கள் பங்கை ஆற்றியுள்ளோம். ஆனால் தற்போதைய சூழலில், ஏற்கனவே பல நாடுகள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இது எங்களுக்கு எந்த வகையிலாவது பயனளிக்குமா? என்பது தெரியவில்லை. எனது பார்வையில், மேற்கு ஆசியா அல்லது கிழக்கு ஐரோப்பா என சமீபத்திய நெருக்கடி சூழல்களில் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவின் நிலைப்பாட்டைப் போலவே இருந்து வருகிறது. சீனாவோ அல்லது இந்தியாவோ மத்தியஸ்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள முன்வரும் என்று தான் கருதவில்லை.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/do-not-compare-us-with-pakistan-indian-ambassador-to-china-clarifies-stance-on-mediation-in-west-asia




