சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 3-ந்தேதி(இன்று) தொடங்கி, 5-ந்தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வில் சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 28,979 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில், சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. 9,316 மாணவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இதில் ஜெனரல் ரேங்க் 37,1977 முதல் 1,31,093 வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 3-ந்தேதி(இன்று) தொடங்கி, 5-ந்தேதி(நாளை மறுநாள்) மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/education-and-employment/student-admissions-in-engineering-colleges-second-round-of-counseling-began-today




