பெண்களின் உடல் பருமன் அதிகரிப்பது ஹார்மோன் சமநிலையை பாதித்து, கருமுட்டைகளின் வளர்ச்சியிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது மிகவும் முக்கியம். உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பு திசுக்களில் இருந்து ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றின் சமநிலையின்மை கருமுட்டைகளின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கக்கூடும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கருமுட்டை முதிர்ச்சி அடைவதில் தாமதம் அல்லது குறைபாடு ஏற்படலாம். இதன் விளைவாக மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக மாறும் வாய்ப்பு உள்ளது. உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இதனால் கருமுட்டைகளின் தரமும் கருத்தரிக்கும் வாய்ப்பும் பாதிக்கப்படலாம். தைராய்டு சுரப்பி கோளாறு மற்றும் புரோலாக்டின் ஹார்மோன் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் ஹார்மோன் சமநிலையை மாற்றி, மாதவிடாய் மற்றும் கருமுட்டை வளர்ச்சியை பாதிக்கக்கூடும். உடல் எடையை குறைப்பதன் மூலம் பல பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை மேம்பட்டு, மாதவிடாய் சுழற்சி சீராகும். இதனால் கருமுட்டை வெளியேறும் செயல்முறையும் இயல்பாக நடைபெற உதவுகிறது. தினசரி உடற்பயிற்சி, சத்தான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. கருத்தரிக்க திட்டமிடும் பெண்கள் உடல் பருமன், ஹார்மோன் பிரச்சனைகள் அல்லது மாதவிடாய் கோளாறுகள் இருந்தால் மகப்பேறு நிபுணரை அணுகி பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பிஸினஸ் தொடங்குகிறீர்களா? வெற்றிக்கு தேவையான முக்கிய திறமைகள் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/factors-affecting-egg-development




