தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “பெண்களை இழிவுபடுத்திப் பேசும் தி.மு.க எனும் ஆபாச நதியின் பிறப்பிடமே. உங்கள் தரக்குறைவான பேச்சுகள், உங்கள் அரசியல் பண்பாட்டின் அவலட்சணத்தை அம்பலப்படுத்துகின்றது. பெண்களை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்ட உங்களுக்கு வெட்கமும், நாவடக்கமும் இல்லையா? தமிழகத் தாய்மார்கள் உங்கள் ஆணவத்தையும், அருவருப்பான பேச்சுகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த இடைத்தேர்தலில் உங்கள் அகந்தைக்கு விழும் அடி, பெண்களை இழிவுபடுத்தும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பாடமாக இருக்கும். உங்கள் அநாகரிகப் பேச்சுக்கு, தமிழகப் பெண்களிடம் பகிரங்கமாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கேளுங்கள். சாக்குப்போக்கு சொல்லி ஒளிந்துகொள்ளாமல், தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மையாவது உங்களுக்கு இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். ’கேப்டன் ஆன்மா பற்றி பேசுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிற்கு அருகதையே கிடையாது’ –பிரேமலதா விஜயகாந்த் காட்டம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/minister-sampathkumar-condemns-stalins-repulsive-speech-stating-that-the-people-will-never-forgive-it




