திருப்பதி, திருப்பதி கோதணடராமர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் அனுமந்த வாகன சேவை விமரிசையாக நடைபெற்றது. வைகானச ஆகம மரபுகளின்படி, வைணவ ஆலயங்களில் பவுர்ணமி, அமாவாசை, வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி மற்றும் திருவோணம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதன்படி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக காலை 8.30 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. ரூ.500 கட்டணம் செலுத்தி சேவையில் பங்கேற்ற பக்தர்களுக்கு சால்வை, ரவிக்கை துணி, லட்டு, வடை பிரசாதம் வழங்கப்பட்டது. அனுமந்த வாகன சேவை சர்வ அலங்காரத்தில் கோதண்டராமர் இரவு 7 மணி முதல் 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. விலைமதிப்புமிக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி, தனது விருப்பமான ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலமாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பி.நாகரத்னா, கண்காணிப்பாளர் ஸ்ரீ கே. ஸ்ரீனிவாசுலு ரெட்டி, கோயில் ஆய்வாளர் ஸ்ரீ சுரேஷ், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/aadi-amavasai-hanumantha-vahanam-seva-at-tirupati-kodndarama-swamy-temple




