சென்னை, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று மதுராந்தகத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே இதற்கான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி இன்று மாலை 3 மணியளவில் இந்த பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளது. முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கலந்துகொள்ளும் முதல் தேர்தல் பிரசாரம் என்பதால் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆட்சி மீது திமுக, அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், அதற்கு விஜய் பதிலடி கொடுத்து வாக்குச் சேகரிப்பார் என்று தெரிகிறது. மதுராந்தகத்தில் முதல் அமைச்சர் விஜய், இன்று பிரசாரம் செய்ய உள்ள நிலையில், 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கியூஆர் கோடு அட்டை கட்டாயம் இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல் அமைச்சர் விஜய் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-by-election-chief-minister-vijay-campaigns-today-permission-granted-for-only-5000-people




