புதுடெல்லி, விளையாட்டுகள், நாம் வெற்றியாளர்களாக ஆவதற்கு மட்டுமல்லாமல், சிறந்த போட்டியாளர்களாகவும் ஆவதற்கு நமக்குக் கற்றுத் தருகின்றன என பிரதமர் மோடி கூறினார். காமன் வெல்த் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் தொடரில் இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் முடித்தது. அதில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றது. விளையாட்டு போட்டிகளில் மிகவும் உயர்வான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சுமாரான செயல்பாடுகளே வழங்கி வருகிறது. கடைசியாக 2024ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியாவின் சர்பாக 6 பதக்கங்களுடன் 75ஆவது இடத்தைப் பிடித்தது. ஒலிம்பிக் போட்டி அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2028ல் அமெரிக்காவில் ஜூலை 14 முதல் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி கேலோ இந்தியாவில் காணொலி வாயிலாக மோடி பேசியிருப்பதாவது: இந்தியாவில் ஒரு நவீன, 21 ஆம் நூற்றாண்டு விளையாட்டுச் சூழலை உருவாக்குவதில் பாஜக அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் இன்று, விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதல் நவீன பயிற்சி மையங்கள் வரை நாடு முழுவதும் ஒரு அமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது, திறமையைக் கண்டறிவது முதல் அவர்களை உலக அரங்கிற்கு உயர்த்துவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்கிறது. ஒலிம்பிக்ஸில் பல வகையான போட்டிகள் இருக்கின்றன. அதில் பாதி போட்டிகளில்கூட இந்திய அணியினர் பங்கேற்பதில்லை. பதக்கப் பட்டியலில் வருவதற்குக் கூட நாம் அதிக போட்டிகளில் பங்கேற்பதில்லை. பல ஆண்டுகளாக இதேபோல தொடர்கதையாக இருக்கிறது. உலகில் உள்ள மற்ற நாடுகள் நாம் பங்கேற்காத போட்டிகளில் பல பதக்கங்களை வெல்கின்றன. பதக்க எண்ணிக்கை உயர்த்த மற்ற போட்டிகளிலும் நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுதந்திர நாள் விழாவில், "விளையாட்டு போட்டிகள் என்பது வெறுமனே பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல; அதுவும் இந்தியாவின் வளர்ச்சிதான். விளையாட்டுகள் நாம் வெற்றியாளர்களாக ஆவதற்கு மட்டுமல்லாமல், சிறந்த போட்டியாளர்களாகவும் ஆவதற்கு நமக்குக் கற்றுத் தருகின்றன. இன்று, விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதல் நவீன பயிற்சி மையங்கள் வரை நாடு முழுவதும் ஒரு அமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 'கேலோ இந்தியா சம்வாத்' 'கேலோ இந்தியா சம்வாத்' என்பது விளையாட்டு பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல; அது ஒரு உரையாடல் தளமாகும். இங்கு ஒவ்வொரு சிறு கருத்தும், விளையாட்டுத் துறை குறித்த தேசத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு புதிய திசையை அளிக்க முடியும். மேலும், இளைஞர்களுடனான இந்த கலந்துரையாடல், உங்கள் கருத்துக்களையும் லட்சியங்களையும் தேசத்தின் கனவுகளுடன் ஒன்றிணைக்க ஒரு சக்திவாய்ந்த தளமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/sports-teach-us-not-only-to-become-champions-but-also-to-become-better-competitors-prime-minister-narendra-modi




