திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களின் உறவினரின் குழந்தைகள் அவருடன் சென்று சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், நாகராஜ் மகள்கள் யோகவர்ஷினி (11), அனன்யா (6) (இருவரும் சகோதரிகள்), ஜெகதீசன் மகள் தனுஸ்ரீ (5), சின்னதம்பி மகள் மோசிகரன் (6) ஆகிய நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பால் வண்டி ஓட்டுநர் சரவணன் இதைக் கண்ட ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸார் நான்கு சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் சரவணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஒரே விபத்தில் சகோதரிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/dindigul-tragedy-as-four-young-girls-die-after-being-hit-by-a-milk-van




