"குழந்தை பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களோட கைவினைப் பொருள்கள் பயணிக்குது" என்று பெருமையுடன் கூறுகிறார், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சரவணன். கடந்த 40 ஆண்டுகளாக சொப்புச் சாமான் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், பல தலைமுறைகளாகத் தொடரும் இந்தப் பாரம்பர்யக் கலையை உயிர்ப்புடன் பாதுகாத்து வருகிறார். சரவணன் பல நூற்றாண்டுகளாக குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக அறியப்படும் சொப்புச் சாமான், இன்று அம்பாசமுத்திரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. முன்பு கைச்சுழற்றல் முறையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள்கள், தற்போது இயந்திரங்களின் உதவியுடன் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வீட்டிற்குத் தேவையான 32 வகையான சிறிய மரப்பொருள்கள் அடங்கிய செட்தான் சொப்புச் சாமான். ``இந்தக் கைவினைக்காக தற்போது பெரும்பாலும் யூகலிப்டஸ் மரம் பயன்படுத்தப்படுகிறது. மரத்தை வெட்டியவுடன் பயன்படுத்த முடியாது. சுமார் ஆறு மாதங்கள் காயவைத்த பிறகே மரக்கடைசல் வேலை தொடங்கப்படுகிறது. அதன் பிறகு அரக்குடன் இயற்கை சாயங்களை கலந்து, தாழம்பூ ஓலையால் பாலிஷ் கொடுக்கப்படுகிறது. அரக்கு பாலிஷ்தான் இந்தக் கலையின் உயிர். அதைக் கற்றுக்கொள்ள தனி பயிற்சி தேவை" என்கிறார் சரவணன். சமீபத்தில் கிடைத்த GI (புவிசார் குறியீடு) அங்கீகாரம் இந்தக் கைவினைக்கு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. யூடியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வருவதாகக் கூறும் அவர், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அந்தத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என வருத்தப்படுகிறார். "மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிரமம், மின்சாரச் செலவு, GST போன்ற சவால்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தத் தொழிலை விட்டுவிடும் எண்ணம் இல்லை; மாறாக, இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு" என்று உறுதியுடன் கூறுகிறார். தற்போது கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி, மதுரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் இவரது சொப்புச் சாமான்கள் விற்பனையாகின்றன. மேலும், இணையதளம் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். பாரம்பர்யத்தையும், கலைநயத்தையும், குழந்தைப் பருவ நினைவுகளையும் ஒன்றாகச் சுமந்து நிற்கும் அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான், அனைவரது வீடுகளிலும் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று! சிறு வயதில் இந்தச் சொப்புச் சாமான்களை வைத்து விளையாடிய அனுபவம் உங்களுக்கு இருந்திருந்தால். கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/arts/choppu-saman-craft-gets-gi-tag-but-no-one-to-carry-it-forward-artisan-saravanan




