18-வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பயணத்தில், அவரது சிறப்பு விமானமான 'Doomsday Plane' கவனம் ஈர்த்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் பணிகளுக்காக இந்த விமானம் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புடினின் பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் இந்த விமானம் Ilyushin ll-96-300PU வகையைச் சேர்ந்தது. இதில் உள்ள 'PU' என்ற குறியீடு, Punkt Upravleniya எனப்படும் 'Command Post' என்பதைக் குறிக்கிறது. சாதாரண பயணிகள் விமானமான ll-96-ஐ அடிப்படையாகக் கொண்டு, அதிபரின் பயணம் மற்றும் முக்கிய தகவல் தொடர்புத் தேவைகளுக்காக இந்த விமானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இந்த விமானத்தின் முக்கிய சிறப்பு அதன் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளாகும். செயற்கைக்கோள் தொடர்பு, பாதுகாக்கப்பட்ட ரேடியோ மற்றும் தரவுத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விமானத்தில் பறந்தபடியே முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க முடியும். சில சர்வதேச ஊடகங்கள் இந்த விமானத்தை 'Flying Kremlin' மற்றும் 'Doomsday Plane' போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன. எனினும், ரஷ்யாவின் பிரத்யேக அணு ஆயுத வான்வழிக் கட்டளை விமானம் என்றால் அது ll-80 ஆகும். ll-96-300PU விமானத்தை 'Doomsday Plane' என அழைப்பது அதன் கட்டளை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகப் பயன்பாடாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் புடினின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் இந்தப் பயணம் கவனம் பெற்றுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு ll-96-300PU விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று புடினின் உண்மையான விமானமாகவும் மற்றொன்று போலி விமானமாக (decoy) செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு PS-90A இன்ஜின்களைக் கொண்ட இந்த விமானத்தின் பயணத் திறன் சுமார் 11,000 கிலோமீட்டர் எனக் கூறப்படுகிறது. வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்கள் தெரியாதபோதிலும், அதன் உள்ளே அதிபருக்கான தனிப்பட்ட அறைகள், கூட்டறைகள் மற்றும் சிறப்பு தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ - புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/technology/putin-arrives-in-delhi-aboard-doomsday-plane-heres-what-makes-it-special




