கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், யாசகம் செய்து வாழ்ந்து வந்த 68 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.40 லட்சம் பணம் மீட்ட்கப்பட்டிருக்கிறது. மாண்டியாவைச் சேர்ந்த ஹூர் என்ற 68 வயது பெண், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று (23) உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்த பொருள்களை அப்பகுதி மக்கள் சோதனை செய்தபோது, ஏராளமான நாணயங்கள் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகள் மூட்டைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அவற்றை வெளியே எடுத்து எண்ணத் தொடங்கினர். இந்தப் பணத்தை எண்ணும் காட்சிகள் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஹூர் தனது சகோதரியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. View this post on Instagram A post shared by SKY 24 INDIA (News Channel) (@sky24india) பின்னர் பணம் முழுவதும் எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணம் ஹூரின் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், ஒரு சகோதரர் ரூ.6 லட்சத்தைப் பெற்றுக்கொண்டார். மற்றொரு சகோதரருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது. அவர் அந்தத் தொகையை பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்து சேமித்த பணம், ஹூரின் மறைவுக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/68-year-old-beggar-dies-rs-840-lakh-found-stashed-in-her-house



