கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்துக் கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்படும்” என்றும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். கனடாவிற்கு அமெரிக்காதான் ‘டாப் ஏற்றுமதி நாடு’ என்பதால், இந்த அறிவிப்பு கனடாவிற்கு நல்ல அடி. ட்ரம்ப்கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்? இதனால், அமெரிக்காவிற்குப் பதிலடி தருவதற்குக் கனடா சில முடிவுகளை எடுத்துள்ளது. அவற்றைச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது கனடா அரசு. அவை. என்ன பிரச்னை? “அமெரிக்கா - கனடா பேச்சுவார்த்தையின் போது, கனடாவிடமிருந்து அமெரிக்கா அதிகமாக எதிர்பார்த்தது. இதனால், கனடாவின் தொழிலாளர்கள், வணிகங்கள், முக்கியத் துறைகள் மற்றும் தேசிய நலனைப் பாதிக்கும் ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்யக் கனடா முடிவெடுத்தது. கனடாவின் பதிலடி இந்த வர்த்தக மோதலைக் கனடா விரும்பவில்லை. ஆனால், கனடா வணிகங்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால் அமெரிக்காவின் வரிக்கு நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும். கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், $27.6 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருள்கள் மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதை எதிர்த்துக் கனடாவுக்கு ‘டாலருக்கு டாலர்’ என்கிற வகையில் அமெரிக்கப் பொருள்களுக்குக் கனடா புதிய வரிகளை விதிக்கும். கனடாவர்த்தக விரிசலில் அமெரிக்கா, கனடா: இதில் யாருக்கு என்ன பிரச்னை? இது சரியாக வாய்ப்புகள் உண்டா? வருகிற செப்டம்பர் 8-ம் தேதி முதல், அமெரிக்காவின் பிரிவு 338 மற்றும் பிரிவு 232 வரிகளின் கீழ், குறிப்பிட்டுள்ள பொருள்களுக்கு இணையான அமெரிக்கப் பொருள்கள் மீது கனடா 15 சதவிகிதம், 25 சதவிகிதம், 50 சதவிகிதம் என வரிகளை விதிக்கும். இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $27.6 பில்லியன் மதிப்புள்ள பொருள்களைப் பாதிக்கும். கனட அரசின் உதவி மேலும், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட கனடியத் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதற்காக, அரசு $7.5 பில்லியன் மதிப்பிலான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது கனடா அரசு.” முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/canada-announces-retaliatory-tariffs-on-276b-us-goods



