புதுடெல்லி, இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சி, 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மாதத்தில் உச்சத்தை தொட்டு இருப்பது தெரியவந்துள்ளது. செப்டம்பரில் உச்சம் இந்தியாவின் உற்பத்தித்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் இது உச்சத்தை எட்டி இருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எச்.எஸ்.பி.சி இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாளர் குறியீட்டில் (பி.எம்.ஐ.) செப்டம்பர் மாத வளர்ச்சி 2 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உச்சம் பெற்று இருக்கிறது. அந்தவகையில், ஆகஸ்டு மாதம் 52.8 புள்ளிகளாக இருந்த இந்த குறியீடு, செப்டம்பரில் 55.1 ஆக அதிகரித்து இருக்கிறது. பி.எம்.ஐ. குறியீட் டில் 50-க்கு மேற்பட்ட புள்ளிகள் தொழிலாளர் துறை விரிவாக்கத்தை குறிப்பதாகும். தேவை அதிகரிப்பு அதிகரித்து வரும் தேவை காரணமாக கிடைத்து வரும் புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தியுடன், தொழிற்சாலை ஆள்சேர்ப்பில் நிலவும் உறுதியான விரிவாக்கம் காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ், உணவு, மருந்து மற்றும் ஜவுளித்துறைகளில் நிலவிய வலுவான தேவை தொழில்துறை வளர்ச்சியை உச்ச நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. மேலும், பிரேசில், ஐரோப்பா, அமீரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ஏற்றுமதி ஆர்டர்களும் விரைவான வேகத்தில் விரிவடைந்துள்ளதாக தொழில்துறை நிபுணர்கள் கூறியுள்னர். அதிக நம்பிக்கை இது குறித்து எச்.எஸ்.பி.சி.யின் தலைமை இந்திய பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறுகையில், 'இந்தியாவின் தொழிற்சாலைதுறை இந்த காலாண்டை வலுவான நிலையில் நிறைவு செய்தது. வலுவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் விற்பனையும் உற்பத்தியும் அதிகரித்ததன் விளைவாக பி.எம்.ஐ. குறியீடு, 52.8-லிருந்து 55.1-ஆக உயர்ந்தது. மே மாதத்தில் இருந்து தொழில்துறை ஆள்சேர்ப்பு மீண்டும் தொடங்கியது. மேலும் உற்பத்தியாளர்கள் வரவிருக்கும் மாதங்கள் குறித்து அதிக நம்பிக்கையுடனும் உள்ளனர்' என்று தெரிவித்தார். மூலப்பொருள் கையிருப்பு மேலும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக்கான தளவாடங்களை அதிக அளவில் கொள்முதல் செய்திருக்கின்றன. இதுவும் ஆகஸ்டு மாதத்தை விட செப்டம்பரில் அதிகரித்து இருக்கிறது. இது குறித்து பண்டாரி கூறும்போது, 'நிறுவனங்கள், எதிர்பார்க்கப்படும் விற்பனைக்கு தயாராவதற்காக அதிக மூலப்பொருட்களை வாங்கி, கையிருப்பை அதிகரித்தன. பொருட்களின் கையிருப்பு, 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2-வது பெரிய அதிகரிப்பைப் பதிவுசெய்தது. இது, குறைந்த கையிருப்பு நிலைகளிலிருந்து ஒரு தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது' என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/indias-factory-growth-climbs-to-7-month-high-on-surging-demand-pmi-shows




