பெங்களூரு, காவிரி நீர் திறக்க வேண்டும் என்று பிறப்பித்த ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- குடிநீர் இல்லை காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தின் நலன் இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளோம். இதுகுறித்து சட்ட நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்துவோம். எங்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லை.இத்தகைய கடினமான நேரத்தில் தமிழகத்துக்கு எப்படி எங்களால் தண்ணீரை திறக்க முடியும். கர்நாடகத்தின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது. சட்ட போராட்டம் மூலம் விவசாயிகளின் நலனை காப்போம். மேகதாது திட்டத்துக்கு இருந்த தடங்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகின்றன. அதனால் மேகதாது திட்ட பணிகள் விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கவனத்தில் கொள்ளவில்லை மேகதாது திட்ட விஷயத்தில் அரசுக்கு தெளிவு உள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தின் ஆட்சேபனைகளை கவனத்தில் கொள்ளவில்லை. அதனால் மேகதாது திட்ட பணிகளை தொடங்க எந்த பிரச்சினையும் இல்லை. மேகதாது திட்ட அறிக்கையில் சில திருத்தங்களை செய்து மீண்டும் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விஜய் வருகை இந்த திட்டத்துக்கு தமிழ்நாட்டின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் கூறியுள்ளது. முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந் தேதி நேரில் சந்தித்து பேச உள்ளார். அதில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேகதாது அணை திட்ட பணிகளால் வனப்பகுதி மூழ்கும். அதற்கு ஈடாக மண்டியாவில் நிலம் வழங்க ஆலோசித்து வருகிறோம். இதுகுறித்து மந்தி ரிசபையில் ஆலோசித்து தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/karnataka-announces-appeal-to-the-cauvery-water-management-authority-against-the-regulation-committees-order




