லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் போஜ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வஜித் (வயது 45). இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது பண்ணை வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த விகாஷ் (வயது 23) என்பவரின் செல்லப்பிராணி நாய் விஸ்வஜித்தை பார்த்து குரைத்துள்ளது. இதற்குமுன் பலமுறை இதுபோல் அதே நாய் விஸ்வஜித்தை பார்த்து குரைத்துள்ளது. துப்பாக்கி சூடு இதனால், ஆத்திரமடைந்த விஸ்வஜித் தனது பைக்கில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர்,தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த நாயை சுட்டுள்ளார். இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு நாயின் உரிமையாளர் இளைஞர் விகாஷ் வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது அவர் மீதும் விஸ்வஜித் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் விகாஷ் படுகாயமடைந்தார். இதையடுத்து, விகாசை மீட்ட கிராமத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஸ்வஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/man-shoots-dog-for-barking-shocking-incident




