"Typing." என்ற மூன்று புள்ளிகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தபால்காரரின் மணி சத்தத்தைக் கேட்டு கடிதத்துக்காகக் காத்திருக்கும் அனுபவம் மீண்டும் பலருக்குப் பிடித்திருக்கிறது. டிஜிட்டல் உலகின் வேகத்துக்கு நடுவே, மெதுவாகப் பயணிக்கும் 'ஸ்நெயில் மெயில்' ஏன் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது? ஒரு காலத்தில் தொலைதூர உறவுகளையும் நட்புகளையும் இணைத்த பாலமாக இருந்தது கையெழுத்துக் கடிதங்கள். செல்போன், மின்னஞ்சல், வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் ஆகியவை வந்த பிறகு, தபால் பெட்டியைத் திறக்கும் பழக்கம் படிப்படியாக மறைந்துவிட்டது. ஆனால், தற்போது அந்த பழக்கம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது. 'ஸ்நெயில் மெயில்' (Snail Mail) என்பது தபால் துறை மூலம் அனுப்பப்படும் கையெழுத்துக் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், புகைப்படங்கள், சிறிய நினைவுப் பரிசுகள் ஆகியவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. வேகமாகச் செல்லும் இணைய உலகுடன் ஒப்பிடும்போது இது மெதுவாகப் பயணிப்பதால், இதற்கு 'Snail Mail' என்ற பெயர் வந்தது. காலை எழுந்ததும் மொபைல். இரவு தூங்கப் போறதுக்கு முன்னாடியும் மொபைல். இதுதான் இப்போ பலருடைய வாழ்க்கை. ஒரு மெசேஜ் அனுப்பின சில நொடிகளில் ரிப்ளை வந்துடும். ஆனா, அதே நேரத்துல ஒரு கடிதத்துக்காக சில நாட்கள் காத்திருக்கிற அந்த சந்தோஷம் வேற லெவல். தொடர்ந்து மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையிலிருந்து சிறிது நேரம் விலகி, மெதுவாக வாழ்வதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இந்தப் போக்குக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களில் மறைந்து போகும் டிஜிட்டல் செய்திகளுக்கு மாறாக, கையெழுத்துக் கடிதங்கள் பல ஆண்டுகள் நினைவுகளாக பாதுகாக்கப்படுகின்றன. AI குறிப்பா Gen Z இளைஞர்களே இந்த டிரெண்டை மீண்டும் கொண்டுவந்திருக்காங்க. வண்ணமயமான காகிதங்கள், ஸ்டிக்கர்கள், சிறிய ஓவியங்கள், பூ இதழ்கள், புகைப்படங்கள் என அலங்கரிச்சு கடிதம் அனுப்புறது இப்போ ஒரு ஹாபியாகவே மாறியிருக்கு. எல்லாமே உடனுக்குடன் கிடைக்கிற காலத்துல, கொஞ்சம் பொறுமையா காத்திருந்து ஒரு கடிதத்தை வாங்குற அந்த உணர்வு. அது எந்த நோட்டிபிகேஷனாலும் கொடுக்க முடியாத மகிழ்ச்சி. அதனால்தான், மின்னஞ்சல் வேகமா ஓடுற இந்தக் காலத்துல கூட, மெதுவா பயணிக்கும் 'ஸ்நெயில் மெயில்' இன்னைக்கும் பலருடைய மனசுல தனி இடத்தைப் பிடிச்சிருக்கு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/the-return-of-the-pen-why-snail-mail-clubs-are-booming




