நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை உயர்வு முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்கிறது. இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ.6.50 என்று உயர்ந்தது. இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்ற புதிய உச்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையில் இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து 660 காசுகளாக (ரூ.6.60) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு தமிழ்நாட்டில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.60 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதிகரித்த விற்பனை, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-purchase-price-hits-new-high-in-namakkal




