வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டிரெய்லர் அறிவிப்பு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாயின. டிரெய்லர் வெளியீடு ஒத்திவைப்பு ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லரை கடந்த 24ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, டிரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா திடீரென அறிவித்தார். டிரெய்லர் காட்சிகள் கசிவு: சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுகளில் திரையிடப்பட்ட டிரெய்லரின் சில முக்கிய காட்சிகள், செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. சுமார் 1 நிமிடம் முதல் 2 நிமிடங்கள் வரையிலான இந்த லீக் செய்யப்பட்ட வீடியோக்களில், ரன்பீர் கபூரின் ராமர் தோற்றம் மற்றும் பிரம்மாண்ட காட்சி அமைப்பு, சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் எமோஷனல் காட்சிகள், ராவணனாக வரும் நடிகர் யாஷின் கம்பீரமான தோற்றம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் கொந்தளிப்பு: டிரெய்லர் லீக்கான தகவல் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இதுவே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பல மாத உழைப்பில் உருவான காட்சிகளை இப்படி திருட்டுத்தனமாக வெளியிடுவது தவறானது என்று ஒருதரப்பினர் படக்குழுவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ஏற்கனவே காட்சிகள் இணையத்தில் பரவிவிட்டதால், தயவுசெய்து எச்டி தரத்திலான அதிகாரப்பூர்வ டிரெய்லரை உடனடியாக யூடியூபில் வெளியிடுங்கள் என TrailerASAP என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். படக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கை: வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், 'காப்பிரைட் ஸ்டிரைக்' மூலம் லீக் செய்யப்பட்ட வீடியோக்களை அகற்றும் பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. “ராமாயணா” புதிய டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 30ம் தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ️. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ranbir-kapoors-ramayana-film-new-trailer-release-date-announced




