புதுடெல்லி, பிராண்ட் மதிப்பில் 300 மில்லியனை தாண்டிய முதல் அணி என்ற பெருமையுடன் ஐ.பி.எல்.-ல் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது. புதிய வரலாறு இந்தியாவில், 19 ஆண்டுகளாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக கடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் சமீபத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2-வது முறையாக மகுடம் சூடியது. சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனமான ஹூலிஹான் லோகி தனது 2026-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பு குறித்த ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வணிக மதிப்பு கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் உயர்ந்து 20.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1.97 லட்சம் கோடி) அடைந்து புதிய வரலாறு படைத்துள்ளது. முதலிடத்தில் பெங்களூரு சந்தை மதிப்பில் ஐ.பி.எல். வளர்ச்சி தொடர்ந்து 2-வது ஆண்டாக இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவின் என்.எப்.எல். (கால்பந்து லீக்) தொடருக்கு அடுத்து உலகின் 2-வது மதிப்புமிக்க விளையாட்டு தொடராக ஐ.பி.எல். திகழ்கிறது. ஐ.பி.எல். அணிகளில் முன்னணி வீரர் விராட் கோலியை உள்ளடக்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்சின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் அதிகரித்து மொத் தம் 312 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.2,986 கோடி) எட்டியுள்ளது. இதன் மூலம் பிராண்ட் மதிப்பில் 300 மில்லியனை தாண்டிய முதல் அணி என்ற பெருமையுடன் ஐ.பி.எல்.-ல் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் மும்பை அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட போதிலும் தனது 5 சாம்பியன் பட்டங்களின் பின்னணியால் ரூ.2,526 கோடி மதிப்புடன் (9.1 சதவீதம் அதிகரிப்பு) 2-வது இடத்தில் தொடருகிறது. முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வலுவான வணிக ரீதியிலான பங்களிப்புகளால் 3-வது இடத்துக்கு (7.9 சதவீத உயர்வுடன் ரூ.2,345 கோடி) முன்னேறியுள்ளது. தொடர்ந்து கடந்த மூன்று சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியதாலும், டோனியின் பங்களிப்பு இல்லாததாலும் சென்னை சூப்பர் கிங்சின் வளர்ச்சி கொஞ்சம் மந்தமடைந்து ரூ.2,335 கோடி மதிப்புடன் (3.8 சதவீதம் உயர்வு) 4-வது இடத்துக்கு சரிந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/rcb-most-valued-ipl-team-at-usd-312-million-csk-only-4th




