சென்னை, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “தன்னுயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட்! கர்நாடகாவில் இருந்து சுமார் 300 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3 நபர்களை, கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகன் குற்றவாளிகளின் காரின் மீது படுத்துக் கொண்டே சுமார் 50 கி.மீ. தூரம் சென்று விரட்டிப் பிடித்து கைது செய்த காணொளி மனதை நெகிழச் செய்கிறது. தமிழகத்தின் திக்கெட்டும் போதைப் பொருட்கள் மலிந்து கிடந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் இவ்வேளையில், தமிழக மக்களின் நலனுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாது, தீர்க்கமாகவும் தீரமாகவும் செயலாற்றிய காவலர் வேல்முருகனின் கடமையுணர்ச்சி உண்மையிலேயே மெச்சத்தக்கது! அன்னாருக்கு தமிழக மக்கள் சார்பாகவும் தமிழக பா.ஜ.க.வின் சார்பாகவும் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடமையை தனது முதற்கண்ணாக கொண்டு செயலாற்றிய இக்காவலரைப் போல ஒட்டுமொத்த அரசும் குடிமக்களும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டாலே போதையென்னும் அரக்கனை தமிழகத்தில் இருந்து விரட்டிவிடலாம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-salute-to-police-constable-velmurugan-who-risked-his-life-to-arrest-smugglers-nainar-nagendrans-praise




