ஜம்மு ஜம்முவில் கேக்கை முகத்தில் பூசிய கோபத்தில் நண்பரை வாலிபர் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது. பிறந்த நாள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜம்மு நகரில் லோயர் ரூப் நகர் பகுதியருகே நண்பர்கள் சிலர் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட சிறிய தகராறு, ஒருவர் உயிரிழக்கும் அளவுக்கு சென்றுள்ளது. நீரஜ் என்பவர் தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது, பவன் நாயர் (வயது 34) என்பவர் பிறந்த நாள் கேக்கின் ஒரு பகுதியை எடுத்து, நீரஜின் முகத்தில் பூசியுள்ளார். இது நீரஜுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. அது தகராறாக மாறியது. அப்போது, உடன் இருந்த ஜான் சொத்ரா, கவுரவ் சிங் மற்றும் சுகந்த் பாட்டி ஆகியோர் தகராறை தீர்க்க முயன்றனர். நீரஜ்ஜிடம் சமரசம் பேசி அவரை அமைதிப்படுத்த முயன்றனர். போலீசார் விசாரணை ஆனால், ஆத்திரம் தணியாத நீரஜ் தன்னிடம் கொண்டு வந்திருந்த கோக்ரி எனப்படும் ஆயுதம் கொண்டு பவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், கழுத்தில் பலத்த காயமடைந்த பவன் சரிந்து விழுந்துள்ளார். அவரை நண்பர்கள் தூக்கிக்கொண்டு ஜம்முவில் உள்ள ஜி.எம்.சி. மருத்துவமனைக்கு சென்றனர். எனினும், அதில் பலனின்றி பவன் உயிரிழந்து விட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து நீரஜை கைது செய்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் நண்பரை தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/youth-kills-friend-after-cake-smeared-on-face-jammu-shock



