கரூர், தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக பல ஆண்டுகளாக கோலோச்சியவரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய், கடந்த 2023-ம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி, அரசியலில் கால்பதித்தார். அதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி மக்களை சந்திக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி அவர் கரூர் மாநகருக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை நேரில் காணும் ஆவலில் அவரது கட்சியினரும், பொதுமக்களும் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் சிக்கினர். முடிவில் 41 பேரை இந்த நெரிசல் சம்பவம் பலி கொண்டு கரூரை கண்ணீரில் மூழ்கடித்து விட்டது. கால சுழற்சியில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று ஓராண்டாகி விட்டது. ஆனால் அந்த நெரிசல் சம்பவம் கரூர் மக்கள் மனதில் மறையாத வடுவாக மாறிப்போனது. இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- முதலாம் ஆண்டு நினைவு தினம் கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. தமிழகத்தின் வரலாற்றில் அழியாத கருப்புப் பக்கம். இந்த விபத்தினை வைத்து அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களோ ஏராளம். இன்று மட்டுமல்ல என்றுமே மனதை விட்ட அகலாத இக்கோர சம்பவத்தின் சாட்சியங்கள் சிதறிக் கிடந்த காலணிகளும், கட்சிக் கொடிகளும் தான். ஆனால் பிரிந்தது 41 உயிர்கள். கைக்குழந்தை முதல் எதிர்கால கனவினை சுமந்த இளைஞர்கள் வரை பாதம் தொட்ட வணங்க வேண்டிய கால்களால் மிதிபட்டு தன்னுயிரை இழந்த ஆறாத வடுக்கள் நிறைந்த கரூரின் கருப்பு தினம். ஆழ்ந்த அஞ்சலிகள் என்று சொல்லிவிட்டு இந்நாளைக் கடந்து விட முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-tragedy-a-tribute-to-vanathi-srinivasan




