சவுத்தம்டன், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. போக்குவரத்தில் சிக்கியதால் தாமதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று இரவு நடந்தது. இந்திய அணியினர் வந்த பஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் 'டாஸ்' போடும் நேரத்துக்குள் ஸ்டேடியம் வந்து சேரமுடியவில்லை. இதனால் ஆட்டம் 30 நிமிடம் தாமதமாக அதாவது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் இரு மாற்றமாக வைபவ் சூர்யவன்ஷி, வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சூர்யான்ஷ் ஷெட்கே சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமதுவுக்கு பதிலாக லியாம் டாசன் இடம் பெற்றார். 2-வது விக்கெட்டுக்கு சாதனை 'டாஸ்' ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர். பில் சால்ட் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக், ஜோஸ் பட்லருடன் இணைந்தார். இருவரும் இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து துரிதமாக ரன் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க வழிதெரியாமல் இந்திய பவுலர்கள் திகைத்தனர். அதிரடியாக ஆடிய ஹாரி புரூக் 19 பந்துகளில் தனது 8-வது அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் 51 பந்துகளில் தனது 2-வது சதத்தை கடந்தார். அடுத்த பந்திலேயே பட்லர் கொடுத்த கேட்ச்சை சூர்யான்ஷ் ஷெட்கே கோட்டை விட்டார். ஸ்கோர் 241 ரன்னாக உயர்ந்த போது ஜோஸ் பட்லர் 131 ரன்னில் (64 பந்து 12 பவுண்டரி, 8 சிக்சர்) ஷிவம் துபே பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 20 ஓவர் போட்டியில் பட்லர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். அத்துடன் இது இந்தி யாவுக்கு எதிராக தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாகவும் பதிவானது. பட் லர்-ஹாரி புரூக் இணை 2-வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு ஒரு ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் (0) முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து அணி வெற்றி 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு இந்த ஆண்டில் இதே இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச மாக இருந்தது. கடைசி ஓவரில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய ஹாரி புரூக் 95 ரன்களுடனும் (45 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), வில் ஜாக்ஸ் 7 ரன் னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு டன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுத் தது. இதனால் இங்கிலாந்து அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 ரன்னும், திலக் வர்மா 53 ரன்னும், கேப் டன் ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்னும், சஞ்சு சாம்சன் 27 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம்கர்ரன் 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் சாய்த்தனர். தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நம்பர் 1 இடத்தை இழந்த இந்தியா இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-4 என தோற்ற இந்திய அணி 1,605 நாட்களுக்குப் பிறகு டி20 தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்படி ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, உலக சாம்பியனான இந்தியாவின் 1,605 நாள் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/england-is-the-new-no-1-ranked-t20i-team-harry-brooks-side-ends-world-champions-indias-1605-day-reign




