புதுடெல்லி, விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைக ளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா. அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர் களை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட் டது. இந்த கமிட்டியினர் பல்வேறு பிரிவுகளில் அலசி ஆராய்ந்து 17 பேரை அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய் தனர். அந்த பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதன்படி கடந்த ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் வாகை சூடிய திவ்யா தேஷ்முக், சமீபத் தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பந்தயங்கள் அடங்கிய டெக்கத்லானில் வெண்க லம் வென்று வரலாறு படைத்த தேஜஸ்வின் சங்கர், பெண் கள் பேட்மிண்டன் இரட்டையரில் சாதித்து வரும் திரிஷா ஜாலி. காயத்ரி கோபிசந்த், காமன்வெல்த் குத்துச்சண்டை யில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி அசத்திய நரேந்தர் பெர்வால் உள்பட 17 பேர் அர்ஜூனா விருது பெறுகிறார்கள். தேசிய விளையாட்டு விருது பெறுவோர் விவரம் வருமாறு:- அர்ஜூனா விருது: தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்), முகமது அஜ்மல் (ஓட்டப்பந்த யம்), பிரியங்கா கோஸ்வாமி (நடைபந்தயம்), திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் (இருவரும் பேட்மிண்டன்). நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜராத்தி, திவ்யா தேஷ்முக் (இருவரும் செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்), லால்ரெம்சியாமி, ராஜ்குமார் பால் (இருவரும் ஆக்கி), சுர்ஜித், பூஜா (இருவரும் கபடி), ருத்ரான்ஷ் கண்டேல்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்), எக்தா பயான் (பாரா தடகளம்), அரவிந்த் சிங் (துடுப்பு படகு). அகில் ஷியோரான் (துப்பாக்கி சுடுதல்) அர்ஜூனா வாழ்நாள் சாதனையாளர்: அருமைநாயகம் (கால்பந்து). சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது: பர்வீர் சிங் (தடகளம்), சோட்டே லால் யாதவ் (குத்துச்சண்டை), நேகா நந்குமார் சவான் (துப்பாக்கி சுடுதல்). துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருது: தர்மேந்திர சிங் யாதவ் (குத்துச் சண்டை), வீரேந்தர் குமார் (மல்யுத்தம்). முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/arjuna-awards-for-17-individuals-including-divya-deshmukh-and-tejaswin-shankar




